உலகம்

டிரம்பின் தொடர் அதிரடி நடவடிக்கையால் பெண் அட்டார்னி ஜெனரல் சல்லி யாட்ஸ் நீக்கம்

முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஈரான், இராக், யேமன், சிரியா, சூடான், லிபியா, சோமாலியா ஆகிய நாடுகளிலிருந்து வருவோரை

DIN

முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஈரான், இராக், யேமன், சிரியா, சூடான், லிபியா, சோமாலியா ஆகிய நாடுகளிலிருந்து வருவோரை அமெரிக்காவுக்குள் அனுமதிக்க கடுமையான நிபந்தனைகள் விதித்தும், அகதிகளை ஏற்பதில் கட்டுப்பாடுகள் குறித்தும் புதிய ஆணையை அதிபர் டிரம்ப் வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுத்த தற்காலிக பெண் அட்டார்னி ஜெனரலை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பணியில் இருந்து நீக்கினார்.
இதுகுறித்து அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், எல்லை தொடர்பான விஷயங்களில், சட்ட விரோத குடியேற்றம் போன்றவற்றில் மிகவும் மோசமான நிலையில் தற்காலிக அட்டார்னி ஜெனரல் சல்லி யாட்ஸ் நடந்து கொண்டார். அமெரிக்க மக்களை காப்பாற்றும் வகையில் கொண்டு வரப்பட்ட சட்ட உத்தரவுகளை அமல்படுத்தாமல், நீதித்துறையை சல்லி யாட்ஸ் ஏமாற்றிவிட்டார். இதையடுத்து அட்டார்னி ஜெனரல் பொறுப்பில் இருந்து சல்லி விடுவிக்கப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இவருக்கு பதிலாக அந்த இடத்தில் ஜெப் செஷன்ஸ் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கும் நிலையில், கிழக்கு மாவட்டங்களுக்கு டானா போயன்டி என்பவரை டிரம்ப் அரசு நியமித்துள்ளது. புதிய செயல் இயக்குநராக தாமஸ் ஹோல்மன் உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காஸாவில் தாக்குதல்களைத் தொடரும் இஸ்ரேல்.. பாலஸ்தீன மக்கள் 12 பேர் பலி!

தமிழக அரசு விருது கிடைக்காத விரக்தியில் விடியோ வெளியிட்ட சிறுவன் அஸ்வந்த்!

நள்ளிரவு 2 மணிக்கு விமான டிக்கெட் முன்பதிவு செய்தால்.. மலிவாக இருக்கும் என்பது உண்மையா?

மகாராஷ்டிரத்தின் முதல் பெண் துணை முதல்வராகும் சுநேத்ரா பவாா்..! இன்று மாலை பதவியேற்பு!

திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயிலில் தைப்பூச தேரோட்டம்!

SCROLL FOR NEXT