உலகம்

பார்வையற்றவர்கள் 'பார்க்க' உதவும் வகையில் மைக்ரோசாப்ட் புதிய 'ஆப்' அறிமுகம்!

IANS

சான் பிரான்சிஸ்கோ: பார்வையற்றவர்களுக்கு உதவும் வகையில் 'செயற்கை நுண்ணறிவு' முறையில் செயல்படும் புதிய 'ஆப்' ஒன்றை  மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது

இது தொடர்பாக மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பார்வையற்றவர்களுக்கு உதவும் வகையில் 'சீயிங் ஏ.ஐ' எனப்படும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையில்  செயல்படும் புதிய 'கேமரா ஆப்' ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளோம். இப்போது இது இலவச ஐபோன் ஆப்பாக  ஆப்பிள் ஸ்டோரில் கிடைக்கிறது.

இது உங்களைச் சுற்றியுள்ள உலகத்தினை உங்களுக்கு எடுத்துரைக்கிறது. இந்த ஆராய்ச்சி திட்டமானது, செயற்கை நுண்ணறிவு முறையின் சாத்தியங்களைப் பயன்படுத்தி, உங்களை சுற்றியுள்ள மனிதர்களை, எழுத்துக்களை மற்றும் பொருட்களை பற்றி எடுத்துக் கூறுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது 

இந்த ஆப்பை பயன்படுத்தும் போனை ஒரு குறிப்பிட்ட இடம்/பொருள் முன்பு  காட்டுவதன் மூலம், அதைப்பற்றிய விவரணைகள் உங்களுக்கு ஒலித்தகவலாக கிடைக்கும்.  இதன் மூலம் காட்சி அனுபவமாக இருக்கக்க கூடிய ஒரு விஷயம், உங்களுக்கு கேட்கும் அனுபவமாக மாறும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆப்பினை பயன்படுத்தி பார்வைத்திறன் குறைபாடு உடையவர்கள் ஒரு பூங்கா பற்றிய தகவல்களை தங்களது போனை பயன்படுத்தி எளிதாக தெரிந்து கொள்ளலாம். அதே போல உணவகத்தில் வழங்கப்படும் பில்லில் உள்ள கட்டணத் தொகையினை அறிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT