உலகம்

சீனா: ஊழலில் ஈடுபட்ட மூத்த தலைவரின் கட்சிப் பதவி பறிப்பு

DIN

சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவர் ஊழலில் ஈடுபட்ட குற்றத்துக்காக அவரது கட்சிப் பதவி பறிக்கப்பட்டது.
இதுகுறித்து ஊடகத் தகவல்கள் தெரிவிப்பதாவது:
சோங்கிங் நகரத்தின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் சன் ஷெங்காய். இவர் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டது.
இந்த நிலையில், அவரை கட்சியிப் பொறுப்பிலிருந்து நீக்கியுள்ளதாகவும், அவருக்கு பதிலாக சென் மைனர் அந்தப் பொறுப்பை ஏற்பார் என்றும் சோங்கிங் மாகாணத்தின் கம்யூனிஸ்ட் கட்சி வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கம்யூனிஸ்ட் கட்சியில் அதிகாரம் வாய்ந்த பொலிட்பியூரோ அமைப்பின் 25 உறுப்பினர்கள் அடங்கிய குழுவில் சன் மற்றும் சென் ஆகிய இருவரும் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அளியரோ அளியர் அளி இழந்தோரே!

யாரோ பிரிகிற்பவரே?

நாளை நடைபெற இருந்த பாஜக ஆலோசனைக் கூட்டம் ரத்து

மானும் நீயே மயிலும் நீயே

தொல்காப்பியத்தை முதலில் பதிப்பித்த மழவையார்

SCROLL FOR NEXT