முகப்பு
உலகம்

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு 'சூனியம்' வைத்த பிரபல பாடகி! 

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அந்நாட்டின் பிரபல பாடகி லானா டெல் ரே 'சூனியம்' வைத்த தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது.

Updated On : 24 ஜூலை, 2017 at 12:42 PM
பகிர்:

லாஸ் ஏஞ்சலீஸ்: அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அந்நாட்டின் பிரபல பாடகி லானா டெல் ரே 'சூனியம்' வைத்த தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் இந்த ஆண்டு துவக்கத்தில் தேர்தடுக்கப்பட்ட சமயத்தில் இருந்து அவருக்கு எதிர்ப்புகள் தொடர்ந்து வலுத்து வருகிறது. அவரது வலதுசாரி தாக்கம் உடைய சிந்தனைகளும், அமெரிக்க நாட்டினரைத் தவிர பிற நாட்டினர் மீது காட்டும் துவேஷமும் இதற்கு முக்கிய காரணங்களாகும். அமெரிக்காவின் பல முக்கிய பிரபலங்களும் டிரம்புக்கு எதிராக கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்

அந்த வரிசையில் அமெரிக்காவின் பிரபலமான பாப் பாடகியான லானா டெல் ரே அமெரிக்க அதிபர் டிரம்புக்கு இந்த ஆண்டு ஆரம்பத்தில் 'சூனியம்' வைத்ததாக அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டி விபரம் வருமாறு:

Advertisement

ஆமாம்; நான் அவருக்கு சூனியம் வைத்தேன் ஏன் கூடாது? நான் இது போல பல செயல்களை செய்திருக்கிறேன். என்னைப் பொறுத்த வரை ஒரு எண்ணத்தின் அதிர்வுக்கு ஒரு வலிமை இருப்பதாக கருதுகிறேன். உங்கள் எண்ணங்கள் முதலில் வலிமை அடையும். பின்னர் அவை வார்த்தைகளாகும்; அவை செயல்களாக மாறும். இறுதியில் செயல்கள் நீங்கள் விரும்பியபடி உடல்ரீதியிலான பாதிப்புகளை உண்டாக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆனால் சூனியம் வைப்பதன் மூலமாக அவர் டிரம்புக்கு என்ன செய்ய  நினைத்தார் என்பது குறித்து எதுவும் சொல்லவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.