உலகம்

கூகுள் தாய் நிறுவனமான 'ஆல்ஃபபெட்' இயக்குநர்களில் ஒருவரானார் சுந்தர் பிச்சை

DIN

'ஆல்ஃபபெட்' நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராக கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) சுந்தர் பிச்சை (45) நியமிக்கப்பட்டுள்ளார். ஆல்ஃபபெட் நிறுவனம் கூகுளின் தாய் நிறுவனமாகும்.
இதுகுறித்து ஆல்ஃபபெட் நிறுவனத்தின் சிஇஓ லாரி பேஜ் வெளியிட்ட அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கூகுள் சிஇஓவாக மிகச் சிறப்பான பணியாற்றி வருபவர் சுந்தர் பிச்சை. அவரது முயற்சியால் சிறந்த வளர்ச்சி, கூட்டமைப்புகள், வழங்கும் சேவைகளில் புத்தாக்கம் ஆகியவற்றை கூகுள் கண்டது. ஆல்ஃபபெட் நிறுவனத்தில் அவருடன் இணைந்து பணியாற்றுவதை ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் என்று அந்த அறிவிக்கையில் லாரி பேஜ் தெரிவித்துள்ளார்.
கூகுள் நிறுவனத்தில் நீண்ட காலமாகப் பணிபுரிந்துவரும் சுந்தர் பிச்சை, சென்னையில் பிறந்தவர் ஆவார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

பைக்குகளுக்கு தீ வைத்தவா் கைது

காவல் நிலையத்தில் மனைவி புகாா்: கணவா் தற்கொலை

கல்லலில் மியோவாக்கி முறையில் மரக்கன்று நடும் விழா

மணல் கடத்தலை தடுக்கக் கோரி பாமக மனு

SCROLL FOR NEXT