முகப்பு
உலகம்

உத்தரப் பிரதேசத்தில் பேருந்து மீது டிரக் மோதி பயங்கர விபத்து: 22 பேர் உடல் கருகி பலி

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி தேசிய நெடுஞ்சாலையில் பேருந்தும் - டிரக்கும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 22 பேர் பலியாகியுள்ளனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:40 PM
பகிர்:

லக்னௌ: உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி தேசிய நெடுஞ்சாலையில் பேருந்தும் - டிரக்கும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 22 பேர் பலியாகியுள்ளனர்.

இன்று அதிகாலை 2.30 மணிக்கு பரேலி தேசிய நெடுஞ்சாலையில் இன்வர்ட்டர் பல்கலைக்கழகம் அருகே பேருந்து திரும்பும் போது எதிரே வந்த டிரக் மோதி விபத்து ஏற்பட்டதில் பேருந்து முழுவதும் மளமளவெனத் தீ பிடித்து எரிந்தது.

இந்தப் பயங்கர விபத்தில் 22 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிந்தனர். பலர் காயம் அடைந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. பேருந்து மீது வேகமாக வந்து மோதிய டிரக் ஓட்டுநர் தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பேருந்து முமுவதும் தீ பற்றி எரிந்ததால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →