உலகம்

ரமலான் தொழுகையில் கலந்து கொண்ட சிரியா அதிபர்

DIN

சிரியா அதிபர் பஷார் அல்}அஸாத், ஹமா நகரில் அமைந்துள்ள மசூதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ரமலான் தொழுகையில் கலந்து கொண்டார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தலைநகர் டமாஸ்கஸூக்கு வெளியே அவர் பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்வது இதுவே முதல் முறையாகும். டமாஸ்கஸிலிருந்து சுமார் 185 கி.மீ. தொலைவில் உள்ள ஹமா நகரில் உள்ள அல்}நூரி மசூதியில் நடைபெற்ற ரமலான் தொழுகையில் அவர் கலந்து கொண்டார். கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக சிரியா அரசுப் படையினருக்கும் கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் அதன் சுற்றுப் பிரதேசங்களுக்கு அந்தச் சண்டையினால் குறிப்பிடத்தக்க பாதிப்பு இல்லை. இருந்தபோதிலும் அதிபர் அல்}அஸாத் சென்ற ஓராண்டு காலத்தில் தலைநகரை விட்டு வெளியே சென்ôகத் தெரியவில்லை.
இந்த நிலையில், ரமலான் நோன்புக் காலம் நிறைவடைந்ததையடுத்து நடைபெற்ற தொழுகையில் கலந்து கொள்ள தலைநகரைவிட்டுப் பயணம் செய்துள்ளார்.
ஹமா நகரில் அவருடன் பல மூத்த அமைச்சர்களும் தொழுகையில் கலந்து கொண்டனர். தொழுகை முடிந்ததும், அல்}நூரி மசூதிக்கு வெளியே காத்திருந்த மக்களுடன் ரமலான் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டார்.
சென்ற ஆண்டு ஹோம்ஸ் நகரில் நடைபெற்ற ரமலான் தொழுகையில் அவர் கலந்து கொண்டார். அதற்குப் பிறகு டமாஸ்க ûஸவிட்டு அவர் வெளியே சென்ôகத் தகவல் இல்லை.
தற்போது தொழுகைக்காக அவர் பயணம் மேற்கொண்ட ஹமா நகரம் அரசின் முழுக் கட்டுப்பாட்டில் இல்லை என்பது குறிப்பிட த்தக்கது. ஹமாவையொட்டிய புகர்ப் பகுதிகளில் கிளர்ச்சியாளர்களுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே அவ்வப்போது சண்டை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
சென்ற 2011}ஆம் ஆண்டு சிரியாவில் உள்நாட்டுப் போர் மூண்டது. இதில் 3 லட்சம் முதல் 4 லட்சம் பேர் வரை பலியானதாகப் பல்வேறு கணிப்புகள் தெரிவிக்கின்றன. ரஷியாவின் ராணுவத் தலையீட்டுக்குப் பின்னர், நடைபெற்ற பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் சண்டை சற்று ஓய்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

SCROLL FOR NEXT