உலகம்

பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம்

DIN

பசிஃபிக் பெருங்கடலில் அமைந்துள்ள சிறிய தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் திங்கள்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதுகுறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது: பப்பு நியூ கினியா தலைநகர் போர்ட் மோர்ஸ்பியிலிருந்து 450 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நியூ பிரிட்டன் தீவை மையமாகக் கொண்டு திங்கள்கிழமை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கடியில் 28 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 அலகுகளாகப் பதிவானது.
இந்த நிலநடுக்கத்தையடுத்து, சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருள்சேதம், உயிர்சேதம் குறித்து இதுவரை தகவல் இல்லை என்று அந்த ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

SCROLL FOR NEXT