உலகம்

பேஸ்புக் மெசேஞ்சரில் வருது 'டிஸ்லைக்' பட்டன்!

IANS

நியூயார்க்: பிரபல சமூக வலைதளமான பேஸ்புக்கில் உள்ள தகவல் பரிமாற்ற சேவையான பேஸ்புக் மெசேஞ்சரில் 'டிஸ்லைக்' பட்டன்  விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக அமெரிக்காவின் ' டெக் க்ரன்ச்' இதழில் வெளியாகியுள்ள செய்தி வருமாறு:

பேஸ்புக்கில் சாதாரணமாக ஒருவர் பதியும் கருத்து நமக்கு பிடித்திருந்தால் அதற்கு 'லைக்' என்னும் விருப்பக்குறி இடலாம். கடந்த வருடம் அத்துடன் சேர்த்து அந்தப் பதிவு தொடர்பான நமது உணர்வுகளை வெளிக்காட்டும் விதமாக காதல்,கோபம். நகைச்சுவை உள்ளிட்ட 'ரியாக்ஷன்' எனப்படும் ஆறு உணர்வு குறியீடுகள் சேர்க்கப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக தற்போது பேஸ்புக்கின் தகவல் பரிமாற்ற சேவையான பேஸ்புக் மெசேஞ்சரில் 'டிஸ்லைக்' எனப்படும் 'தம்ப்ஸ் டவுன்' பட்டன்  விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மெசேஞ்சர் சேவையை சுவாரஸ்யமானதாக மாற்ற எங்களால் இயன்ற முயற்சிகளை சோதனை அடிப்படையில் செய்து வருகிறோம்.

அதன் அடிப்படையில் இனி பயனாளர்கள் மற்றொருவருடன் உரையாடலில் ஈடுபடும் பொழுது எமோஜிகளை பயன்படுத்தலாம். அத்துடன் தற்போது ஏற்கனவே உள்ள ஆறு ரியாக்ஷன் பட்டன்களுடன்  புதிதாக 'டிஸ்லைக்' எனப்படும் 'தம்ப்ஸ் டவுன்' பட்டன் சேர்க்கப்பட உள்ளது. ஆனால் இந்த வசதி பேஸ்புக் பதிவுகளுக்கு கிடையாது" என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானப் பயணம் போக வேண்டுமா?

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

கோடைகால கிரிக்கெட் போட்டி தொடக்கம்

SCROLL FOR NEXT