அமெரிக்காவில் பெற்ற தாயை கொலை செய்த இந்திய வம்சாவளி சிறுவன் கைது
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 17-வயது சிறுவன் தனது தாயை கொலை செய்த குற்றத்திற்காக கைது போலீஸார் கைது செய்துள்ளனர்.
வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 17-வயது சிறுவன் தனது தாயை கொலை செய்த குற்றத்திற்காக கைது போலீஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அமெக்கவாழ் இந்தியர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் 17-ஆம் தேதி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நளினி தெல்லப்ரோலு என்ற பெண் முகத்தில் பிளாஸ்டிக் பையை மூடி கழுத்து நெறிக்கப்பட்டு அவரது இல்லத்தில் மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.
நளினியின் உடல் அவரது முகம், கழுத்து, உடல் மற்றும் கைகளில் காயங்கள் மற்றும் கீறல்கள், மற்றும் சிறிய கூர்மையான ஆயுதங்களால் காயங்கள், கழுத்து குருத்தெலும்பு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அவரது கொலை வழக்கை கலிபோர்னியா மாகாண போலீஸார் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் நளினியின் கொலை தொடர்பாக, அவரது 17 வயது மகனான அர்னவ் உப்பலாபதி என்ற சிறுவனை போலீஸார் கைது செய்தனர். கொலையில் சிறுவன் சம்மந்தப்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாகவே அச்சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார்ர் தெரிவித்துள்ளனர். இருப்பினும் சிறுவன் தந்து தாயை கொலை செய்ததற்கான காரணத்தை போலீஸார் தெரிவிக்கவில்லை.
பெற்ற தாயையே கொன்றதாக மகன் உப்பலாபதி கைது செய்யப்பட்டுள்ளது அவரது குடும்பத்தினரையும் நட்பு வட்டாரத்தையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.