வாராணசி - கொழும்பு இடையே நேரடி விமான சேவை: மோடி அறிவிப்பு
வாராணசி - கொழும்பு இடையே ஏர் இந்தியா நிறுவனத்தின் நேரடி விமான சேவை வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கும் என்று இலங்கையில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
கொழும்பு: வாராணசி - கொழும்பு இடையே ஏர் இந்தியா நிறுவனத்தின் நேரடி விமான சேவை வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கும் என்று இலங்கையில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக இலங்கை சென்றுள்ள பிரதமர் மோடி, சர்வதேச விசாக் தின விழாவில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், இந்த விமான சேவை மூலமாக இலங்கையில் வாழும் எனது தமிழ் சகோதர சகோதரிகள், வாராணசி வந்து, அங்கிருக்கும் காசி விஸ்வநாதரை தரிசிக்க முடியும்.
Advertisement
வாராணசியில் இருந்து 10 கி.மீ. தொலைவில் இருக்கும் புகழ்பெற்ற புத்தஸ்தலமான சர்நாத் ஆலயத்தையும், அதன்பிறகு, பிகாரில் உள்ள போத் கயாவையும் தரிசிக்க வழி ஏற்படும்.
புத்த மதத்தை சார்ந்த ஏராளமான மக்கள் வசிக்கும் இலங்கையில் இருந்து நேரடி விமான சேவை வழங்குவதன் மூலம் புத்தரின் பூமியில் உள்ள குசிநகர், கவுசம்பி, சார்நாத் உள்ளிட்டஇடங்களுக்கு இலங்கை மக்கள் எளிதாக வந்து சேர முடியும் என்று கூறினார்.
பிரதமராக பதவியேற்ற பிறகு பிரதமர் மோடி கடந்த 2 ஆண்டுகளில் இலங்கைக்கு மேற்கொள்ளும் இரண்டாவது பயணமாகும்.