உலகம்

"அமெரிக்காவுக்கு உளவுத் தகவல் அளித்த பலர் சீனாவில் படுகொலை'

DIN

சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு உளவுத் தகவல் அளித்து வந்தவர்களில் குறைந்தபட்சம் 20 பேர் படுகொலை செய்யப்பட்டதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது.
கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் 2012-ஆம் ஆண்டு வரையிலான கால அளவில் இந்தப் படுகொலைகள் நடைபெற்றதாகவும் முன்னாள் அதிகாரிகள் அளித்த தகவல்களின் அடிப்படையில் இந்தச் செய்தியை வெளியிடுவதாகவும் அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.
நியூயார்க் டைம்ஸ் அந்த செய்திக் கட்டுரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ. வெளிநாடுகளில் பல உளவாளிகளை அனுப்பி தகவல்கள் சேகரிப்பதுடன், பல நாடுகளில் உளவுத் தகவல்கள் அளிக்கவும் பலரை "நியமித்திருந்தது'. அந்த வகையில் சீனாவில் நியமிக்கப்பட்ட சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிலர் படுகொலை செய்யப்பட்டனர். 2010-2012 ஆண்டுகளுக்கு இடையில் மட்டுமே குறைந்தபட்சம் 20 பேர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று முன்னாள் அதிகாரிகள் அளித்த தகவல்களிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.
உளவுத் தகவல்கள் அளிக்கும் நபர்களின் விவரம் எவ்வாறு கசிந்தது என்பது இதுவரை புரியாத புதிராக உள்ளது. சி.ஐ.ஏ. உளவு அமைப்பிலேயே சீனாவின் உளவாளியாக எவரேனும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறாரா அல்லது சி.ஐ.ஏ.யின் தகவல் சேமிப்பகத்தை ஊடுருவி இந்த விவரங்களை சீனா அறிந்து கொண்டதா என்பது தெரியவில்லை.
சீனாவில் உள்ள அமெரிக்க உளவாளிகளுடனும், உளவுத் தகவல்கள் அளிப்பவர்களுடனும் தொடர்பு கொள்ள சி.ஐ.ஏ. ஏற்படுத்தியிருந்த ரகசிய வழிமுறைகளை கணினி ஊடுருவல் மூலம் சீனா கைப்பற்றியதா என்பது குறித்து அதிகாரிகளிடையே ஒருமித்த கருத்து இல்லை என்று அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

வெப்பத்தின் பிடியில் சிக்கிய ராஜஸ்தான்!

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

SCROLL FOR NEXT