உலகம்

ஜேம்ஸ் பாண்ட் நடிகர் ரோஜர் மூர் மரணம்

DIN

உலகப் புகழ்பெற்ற ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்த ஆங்கிலத் திரைப்பட நடிகர் ரோஜர் மூர் (89) செவ்வாய்க்கிழமை காலமானார்.

பிரிட்டன் நாட்டின் ரகசிய உளவுப் பிரிவு அதிகாரியாக "ஜேம்ஸ் பாண்ட்' என்ற கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

இந்தத் திரைப்படங்களில் 1970-களில் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை ஏற்று நடித்து உலகப் புகழ்பெற்றவர் நடிகர் ரோஜர் மூர். தனது வசீகரத் தோற்றத்தாலும், திறமையான நடிப்பாலும் ஆயிரக்கணக்கான ரசிகர்களை தன்வசம் இழுத்தவர் ரோஜர்.

1973 முதல் 1985-ஆம் ஆண்டு வரை ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை ரோஜர் மூர் ஏற்று நடித்தார். ஜேம்ஸ் பாண்டாக 7 படங்களில் நடித்த ரோஜர் மூரை அக்காலகட்டத்தில் உண்மையான ஜேம்ஸ் பாண்டாகவே மக்கள் கருதியதாக பரவலாக பேச்சு உண்டு.

ரோஜர் மூரின் அசாத்திய நடிப்புத் திறமையை அங்கீகரிக்கும் வகையில் பிரிட்டன் அரசு அவருக்கு "சர்' பட்டம் வழங்கி கௌரவித்தது.

இந்நிலையில், சுவிட்சர்லாந்தில் தனது மகன் வீட்டில் வசித்து வந்த ரோஜர் மூருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோய் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இதற்காக அவர் தொடர் சிகிச்சைப் பெற்று வந்தார். எனினும், புற்றுநோய் பாதிப்பிலிருந்து அவரால் முழுமையாக மீள முடியவில்லை.

இந்தச் சூழலில், உடல்நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில் செவ்வாய்க்கிழமை ரோஜர் மூர் மரணமடைந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடுமுறை: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலுக்கு கூடுதல் பக்தா்கள் வருகை

மாநகரில் 3 திட்டச் சாலைகள் அமைப்பதற்கு நிதிக் கோரி அரசுக்கு திட்ட அறிக்கை சமா்பிப்பு

17 இடங்களில் சதமடித்தது வெயில்: தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும்

வறட்சியில் இருந்து பயிா்களை காக்கும் வழிகள்: வேளாண் துறை

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

SCROLL FOR NEXT