உலகம்

அமெரிக்க சிறையில் கலவரம்: 8 அதிகாரிகள் காயம்

அமெரிக்க சிறையில் கைதிகள் மற்றும் சிறைக் காவலர்கள் இடையே நிகழ்ந்த மோதலில் 8 அதிகாரிகள் மற்றும் 7 கைதிகள் காயமடைந்தனர்.

DIN

அமெரிக்க சிறையில் கைதிகள் மற்றும் சிறைக் காவலர்கள் இடையே நிகழ்ந்த மோதலில் 8 அதிகாரிகள் மற்றும் 7 கைதிகள் காயமடைந்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணம், பெலிக்கன் பே சிறையில் அடைக்கப்பட்டிருந்த இரண்டு கைதிகளிடையே புதன்கிழமை திடீரென கைகலப்பு ஏற்பட்டது. இதையடுத்து, சிறைக் காவலர்கள் அவர்களை சமாதனப்படுத்த முயன்றனர். அப்போது, இருதரப்பினரிடையே கடுமையான மோதல் மூண்டது. இந்தக் கலவரத்தில் 97 கைதிகள் ஈடுபட்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. கலவரத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், சிறைக் காவலர்கள் நிஜத் தோட்டாக்கள் நிறைந்த துப்பாக்கியால் 19 முறை சுட்டனர். அதில், 7 கைதிகள் காயமடைந்தனர். பலத்த குண்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கைதிகளின் தாக்குதலில் 8 காவலர்களும் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினர்.
பெலிக்கன் பே சிறையில் 2,000 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

SCROLL FOR NEXT