சிரியா கார் வெடிகுண்டு தாக்குதலில் 12 பேர் பலி!
சிரியாவில் ஐ.எஸ் அமைப்பினர் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 12 பேர் பலியாகினர்.
பெய்ரூட்: சிரியாவில் ஐ.எஸ் அமைப்பினர் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 12 பேர் பலியாகினர்.
இது தொடர்பாக சிரியாவில் இருந்து செயல்படும் சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் என்ற பன்னாட்டு அமைப்பு வெளியிட்டுள்ள தகவலாவது:
சிரியாவில்ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் பிடியில் இருந்த கடைசி நகரமான டெயிர் அல் எஸ்ஸார் நகரும் அரசுப் படைகளின் கட்டுப்பாட்டில் வநது விட்டது. இந்நிலையில் அங்குள்ள மக்கள் போரின் காரணமாக அங்கிருந்து நகர்ந்து யூப்ரடீஸ் நதியின் கிழக்கு கரை பகுதியில் ஒன்றாக இருந்தனர்.
Advertisement
இந்த நிலையில் அங்குள்ள மக்களை இலக்காக கொண்டு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு கார் வெடிகுண்டு தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளது. இதில் 12 பேர் பலியாகியுள்ளனர். 12 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து உள்ளனர்.