சினிமா பாணியில் துப்பாக்கி முனையில் இந்தியத் தூதர் வீடு சூறை
தென் ஆப்பிரிக்காவில் உள்ள இந்தியத் தூதரின் வீடு துப்பாக்கி முனையில் சூறையாடப்பட்டது.
Updated On : 29 ஜனவரி, 2024 at 11:39 PM
தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் இந்தியத் தூதர் டாக்டர்.ஷஷாங்க் விக்ரம் வசித்து வருகிறார். அவரது இல்லத்தில் சினிமா பாணியில் துப்பாக்கி முனையில் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
கடந்த நவம்பர் 16-ந் தேதி விக்ரம் வீட்டில் இருக்கும் சமயத்தில் இந்தத் திருட்டுச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
வீட்டில் அத்துமீறி நுழைந்த நபர்கள் விக்ரம் மகன் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டினர். அப்போது வீட்டில் இருந்த பணம், நகை உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களைத் திருடிச் சென்றுள்ளனர்.
Advertisement
இச்சம்பவம் தொடர்பாக இதுவரை துப்பு கிடைக்காமல் காவல்துறை திணறி வருகிறது. இருப்பினும் தொடர்ந்து விசாரித்து வருவதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.