உலகம்

அமெரிக்காவின் ரிச்சர்டு ஹெச். தாலருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு

2017ம் ஆண்டு, பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற அமெரிக்காவின் ரிச்சர்டு ஹெச். தாலர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

PTI

ஸ்டாக்ஹோம்: 2017ம் ஆண்டு, பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற அமெரிக்காவின் ரிச்சர்டு ஹெச். தாலர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில், நோபல் பரிசுக் குழுத் தலைவர் கோரன் ஹான்சன், இதனை அறிவித்தார்.

உளவியலுக்கும் பொருளாதாரத்துக்கும் இடையே இருந்த இடைவெளியை ஒருங்கிணைத்ததற்காக, 2017ம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு, அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் ஹெச் தாலருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

"சமூக பங்களிப்பு, சுயக் கட்டுப்பாட்டில் தளர்வு, குறைந்த பகுத்தறிவு போன்ற மனிதர்களின் தனிக்கூறுகள் மற்றும் தனிமனிதர்களின் முடிவுகள் எவ்வாறு பொருளாதார சந்தையை பாதிக்கின்றன என்பது குறித்து வெளிப்படுத்தியதற்காக" என்று நோபல் பரிசு குறித்த அறிவிப்பின் போது வாசிக்கப்பட்டது.

ரிச்சர்ட் ஹெச். தாலர், தற்போது சிகாகோ பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியராக உள்ளார். 

முன்னதாக, பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெறும் வாய்ப்புள்ளவர்களின் பட்டியலில், சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கும் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனின் பெயர் இடம்பெற்றிருந்ததால், பொளாதாரத்துக்கான நோபல் பரிசு பற்றிய அறிவிப்பு இந்தியர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீரமாமுனிவா் தமிழாய்வு மன்ற விழா

காலத்தால் அழியாத புகழ் கொண்டவா் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா்: வைகோ

முல்லைப் பெரியாறு அணையில் மழை

சமூக வலைதளத்தில் விடியோ பதிவிட்ட இளைஞா் கைது

முள்ளம்பன்றி வேட்டையாடியவா் கைது

SCROLL FOR NEXT