உலகம்

அமெரிக்க காட்டுத் தீயில் சிக்கி 23 பேர் பலி

DIN

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் பற்றி எரியும் காட்டுத் தீயில் சிக்கி 23 பேர் உயிரிழந்தனர். 
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:
கலிஃபோர்னியாவில் பேரழிவை ஏற்படுத்தியுள்ள காட்டுத் தீயில் சிக்கி 23 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 13 பேர் சோனோமா மாவட்டத்தையும், 6 பேர் மென்டோசினொ மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள். நேப்பா மற்றும் யூபா மாவட்டங்களைச் சேர்ந்த தலா இருவர் காட்டுத் தீக்கு பலியாகினர்.காட்டுத் தீயில் சிக்கி காணாமல் போன 285 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். 
தீயை அணைக்கும் பணிகள் அண்டை மாகாணங்களான, அரிசோனா, நெவாடா, ஓரேகான், வாஷிங்டன் ஆகியவற்றின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
பல்வேறு மாகாணங்களிலிருந்து 300-க்கும் அதிகமான தீயணைப்பு வண்டிகள் கலிஃபோர்னியா விரைந்துள்ளன. தீயை அணைக்கும் பணிகளில் 8,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்ற இளைஞரால் பரபரப்பு!

‘எங்கேயும் எப்போதும்..’

பாலியல் விடியோக்களை வெளியிட்டது நான்தான்.. பிரஜ்வல் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்!

மழை வேண்டி நூதன வழிபாடு: பன்றி பலியிட்டு விருந்து!

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

SCROLL FOR NEXT