உலகம்

தென் கொரிய முன்னாள் அதிபரின் சிறைக் காவல் நீட்டிப்பு

DIN

தென் கொரியாவின் முன்னாள் அதிபர் பார்க் கியூன்-ஹையின் சிறைக் காவலை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து சியோல் மாவட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
பார்க் கியூன்-ஹையின் சிநேகிதி சோய் சூன்சில், அதிபருடன் இருந்த நெருக்கத்தை தவறாகப் பயன்படுத்தி பல நிறுவனங்களிடமிருந்து பெரும் தொகையைத் திரட்டினார். மேலும் பல அரசு நியமனங்களில் தலையிட்டதுடன் அரசு நிர்வாகத்திலும் அவர் தலையிட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அப்போதைய அதிபர் பார்க் கியூன்-ஹைக்கு எதிராக நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. நாடாளுமன்றத்தால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட அவர் 6 மாதம் சிறைக் காவலில் வைக்கப்பட்டார். அவர் மீதான ஊழல் வழக்கு சியோல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 
இந்நிலையில், அவரது 6 மாத சிறைக் காவல் முடிவுக்கு வந்ததால் மாவட்ட நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார்.
வழக்கு விசாரணை இன்னும் முடிவடையாத நிலையில், அவரை ஜாமீனில் விடுவித்தால் சாட்சியங்களைக் கலைத்துவிடுவார் என்று அரசுத் தரப்பு வாதிட்டது. இதையடுத்து, அவரை மேலும் 6 மாத காலம் சிறைக் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலை: 77,848 பக்தா்கள் தரிசனம்

பேருந்து மோதி தனியாா் நிறுவன ஊழியா் பலி

கோடை விடுமுறை: விமான சேவைகள் அதிகரிப்பு

உதகை, கொடைக்கானல்: வாகனங்கள் இன்றுமுதல் இ-பாஸ் பெறலாம்

மின் வாரிய ஆள்குறைப்பு ஆணைகளை ரத்து செய்ய கோரிக்கை

SCROLL FOR NEXT