உலகம்

இந்தோனேஷிய பட்டாசு ஆலை விபத்து: பலி எண்ணிக்கை 47-ஆக உயர்வு

DIN

இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகர்தா நகரில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இங்கு வியாழக்கிழமை திடீரென விபத்து ஏற்பட்டது.

இங்கு திடீரென ஏற்பட்ட மின்கசிவு காரணமாக பட்டாசு ஆலை முழுவதும் வெடித்துச் சிதறியது. இதனால் விபத்து நடந்த பகுதியில் இருந்து பல மைல் தூரத்துக்கு சப்தம் ஏற்பட்டது. மேலும் அதன் அதிர்வும் உணரப்பட்டது.

கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் திறக்கப்பட்ட இந்த பட்டாசு ஆலை முறையான ஆவணங்களுடன் அனுமதி பெற்று இயங்கி வருகிறது.

இந்நிலையில், இங்கு ஏற்பட்ட இந்த கோர விபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 47-ஆக உயர்ந்தது. மேலும் பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்குப் போராடி வருகின்றனர்.

விபத்து ஏற்பட்ட சிறிது நேரத்தில் பாதிக்கப்பட்ட அனைவரும் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வளா்ப்பு நாய்கள் கடித்து சிறுமி பலத்த காயம்: உரிமையாளா் உள்பட 3 போ் கைது

கடலூா் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் வெப்ப நோய் சிகிச்சைப் பிரிவு தொடக்கம்

பைக் மீது காா் மோதல்: மூவா் காயம்

முதியவா் சடலமாக மீட்பு

பாரதிதாசன் மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

SCROLL FOR NEXT