உலகம்

அமெரிக்கப் பெண் பாகிஸ்தானில் சிறைபிடிப்பு

Raghavendran

பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டி என்ற நகரத்தில் அமெரிக்கப் பெண் ஒருவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

அமெரிக்காவின் மேற்கு விர்ஜினா மாகாணத்தைச் சேர்ந்தவர் எலிசபத் மேரி லான்காஸ்டர் (31 வயது). இவர் கடந்த ஆண்டு மே மாதம் 180 நாட்களுக்கு சுற்றுலா விசா பெற்று பாகிஸ்தான் வந்தடைந்தார். 

இதனையடுத்து எலிசபத்தின் விசா காலம் கடந்த வருடம் நவம்பர் மாதத்துடன் நிறைவடைந்தது. இதையடுத்து நடப்பு ஆண்டின் மே மாதம் வரை நீட்டிக்கப்பட்டது.

பின்னர் அக்டோபர் 15-ந் தேதி வரை எலிசபத்தின் விசா காலக்கொடு கூடுதலாக நீட்டிக்கப்பட்டது. இவர் பாகிஸ்தானைச் சேர்ந்த அத்நான் கான் என்பவரை திருமணம் செய்துகொண்டு கடந்த 18 மாதங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் வந்தடைந்தார்.

இந்நிலையில், பாகிஸ்தான் காவல்துறையால் எலிசபத், ராவல்பிண்டியில் கைது செய்யப்பட்டு பெண்கள் காவல்நிலையத்தில் சிறை வைக்கப்பட்டார். இதுதொடர்பாக அமெரிக்கத் தூதரகம் மற்றும் பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பு ஆகியவற்றுக்கு தகவல் அளிக்கப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

SCROLL FOR NEXT