உலகம்

தென்கொரிய அணுஆயுத கட்டுப்பாட்டில் தளர்வு: அமெரிக்கா ஆதரவு

DIN

சமீபகாலமாக வடகொரியா 6 முறையாக சக்திவாய்ந்த அணுஆயுதங்களை வெற்றிகரமாக பரிசோதித்தது. உலக நாடுகளின் அணுஆயுத ஒப்பந்தங்களை மீறியும் செயல்பட்டு வருகிறது.

இது தற்போது உலக நாடுகளிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் வடகொரியா மீது அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்கவும் பரிசீலித்தது.

வடகொரியாவின் இந்த தொடர் நடவடிக்கைகளால் இந்தியா, ரஷியா, சீனா உள்ளிட்ட நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், அணுஆயுதம் தொடர்பான கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு அளிக்க தென்கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்தது. 

இதுதொடர்பாக வெள்ளை மாளிகை சார்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறியாதவது:

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் தென்கொரிய அதிபர் மூன் ஜீ-இன் ஆகியோரின் கூட்டு நடவடிக்கையின் அடிப்படையில் தென்கொரியாவுக்கு அணுஆயுதங்கள் மீதான கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு அளிக்கப்படவுள்ளது.

மேலும், அமெரிக்காவின் பல பில்லியன் டாலர்கள் மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்களை தென்கொரியாவுக்கு அளித்து உதவ அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT