முகப்பு
உலகம்

ஆங் சான் சூகி-க்கு பிரதமர் நரேந்திர மோடி சிறப்புப் பரிசு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மியான்மர் அரசு ஆலோசகர் ஆங் சான் சூகி-க்கு சிறப்புப் பரிசை புதன்கிழமை வழங்கினார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:49 PM
பகிர்:

சீனாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொண்ட பிறகு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, செவ்வாய்கிழமை மியான்மருக்கு 3 நாள் அரசுமுறைப் பயணமாகச் சென்றடைந்தார். 

தற்போது தான் மியான்மர் நாட்டுக்கு முதன்முறையாக பிரதமர் மோடி செல்கிறார். தலைநகர் நய் பியி டாவில் பிரதமர் மோடிக்கு, மியான்மர் அதிபர் ஹிடின் கியாவ் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

பிரதமர் மோடி, மியான்மர் அரசு ஆலோசகர் ஆங் சான் சூகி-யை புதன்கிழமை சந்தித்தார். அப்போது இரு நாடுகளுக்கு இடையிலான 11 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்நிலையில், பிரதமர் மோடி மியான்மர் அரசு ஆலோசகர் ஆங் சான் சூகி-க்கு சிறப்பு நினைவுப் பரிசை வழங்கினார்.

அதில், சிம்லாவில் உள்ள இந்திய ஆராய்ச்சிக் கழகத்தில் 1986-ம் ஆண்டு ஆங் சான் சூகி தயாரித்த ஆராய்ச்சிப் படிப்பு திட்ட வரைவு அறிக்கையை அவரிடமே வழங்கினார்.

முழு கட்டுரையைப் படிக்க →