உலகம்

இர்மா சூறாவளிக்கே ஷாக் கொடுத்த விமானப் படையைச் சேர்ந்த புதுமணத் தம்பதி

DIN


ஓர்லாண்டோ: மணப் பெண் லாரென் தர்ஹாம் வெள்ளை ஆடையில் மிக அழகாக அலங்காரம் செய்து கொண்டு வர, கடற்கரையில் கோலாகலமாக நடக்க வேண்டிய திருமணம், மீட்பு வாகனங்கள், ரப்பர் போட், துணை ராணுவத்தினர் முன்னிலையில் நடந்தேறியது. காரணம் இர்மா.

அமெரிக்காவின் பல முக்கிய மாகாணங்களை சூறையாடி அடையாளம் தெரியாத அளவுக்கு விட்டுச் சென்ற இர்மா சூறாவளியால், தங்களது திருமண திட்டத்தை வேண்டுமானால் தவிடுபொடியாக்கலாம். தங்களது திருமணத்தை அல்ல என்று லாரென் தர்ஹாம் - மைக்கேல் டேவிஸ் நிரூபித்துள்ளனர்.

தேசிய விமானப் படையில் பணியாற்றும் இருவரும் மீட்புப் பணிகளுக்கு இடையே தங்களது திருமணத்தை செய்து கொண்டனர். திருமணம் முடிந்த கையோடு, சூறாவளியில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணிக்காக இருவரும் தீரத்தோடு புறப்பட்டனர்.

முன்னதாக, மீட்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டிருந்த முகாமில் அன்றைய தினம் காலை, நண்பர்களுடன் உணவருந்தி கொண்டிருந்த போது, 'ஏன் நீங்கள் இந்த சூறாவளியில் திருமணம் செய்து கொள்ளக் கூடாது?' என்று ஒருவர் கேட்டார்.

முதலில் இது நகைச்சுவையாகவே ஆரம்பித்தது. பலரும் பல கருத்துகளை சொல்லி இறுதியில் உண்மையாகவே நடந்துவிட்டது என்றார் தர்ஹாம்.

பல ஆண்டு காலம் ஒன்றாக பணியாற்றும் நண்பர்கள், மீட்கப்பட்ட மக்கள், மீட்புக் குழுவினர்  மத்தியில் திருமணம் நடைபெற்றது. எங்களது திருமண கேக் இல்லை. பரவாயில்லை. சற்று உணவுப் பண்டங்கள் இருந்தன. ஆனாலும் நாங்கள் சற்று பதற்றமாகவே இருந்தோம் என்கிறார்கள் மணமக்கள்.

என் திருமணத்துக்காக  வாங்கிய ஆடை வீட்டில் பத்திரமாக உள்ளது. அது மிக அழகான ஆடை, மிக நீண்ட ஆடை, ஆனால், என் சீருடையை நான் மிகவும் விரும்புகிறேன். எனவே, எனது திருமணம் இந்த சீருடையில் நடந்ததை நினைத்துப் பெருமைப்படுகிறேன் என்றார் தர்ஹாம்.

மணமகனாகிய டேவிஸ் கூறுகையில், ரப்பர் போட்களுக்கு இடையே, உறவுகள் யாரும் இன்றி எங்கள் திருமணம் நடந்திருப்பது குறித்து அறிந்தால் பெற்றோர் என்ன நினைப்பார்கள் என்று தெரியவில்லை. ஆனால், நிச்சயிக்கப்பட்டபடி எங்கள் திருமணம் நடந்திருக்கிறது என்று நினைத்து மகிழ்வார்கள் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 உயா்வு

மகளிா் டி20: வங்கதேசத்துடனான தொடரை வென்றது இந்திய அணி

சங்கரன்கோவில் கல்வி மாவட்டம் உருவாக்க வலியுறுத்தல்

டாஸ்மாக் ஊழியரிடம் வழிப்பறி செய்ய முயன்ற இருவா் கைது

ஆறுமுகனேரியில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல்

SCROLL FOR NEXT