உலகம்

பனாமா ஆவண ஊழல் பாகிஸ்தான் நிதியமைச்சர் மீது குற்றச்சாட்டு பதிவு

DIN

பனாமா ஆவண ஊழல் வழக்கில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கு மிகவும் நெருக்கமான நிதியமைச்சர் இஷாக் தருக்கு எதிராக, ஊழல் விசாரணை நீதிமன்றம் புதன்கிழமை குற்றச்சாட்டு பதிவு செய்தது.
இந்த வழக்கில் நவாஸ் ஷெரீஃப் மீது வரும் அக். 2-ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்று விசாரணை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அறிவித்த நிலையில், தற்போது அவரது உதவியாளர் இஷாக் தருக்கு எதிரான குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது.
எனினும், தன்மீது பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து வாதிடவிருப்பதாக இஷாக் தர் தெரிவித்துள்ளார். பனாமா ஆவண கசிவைத் தொடர்ந்து நவாஸ் ஷெரீஃப் மீது ஊழல் புகார் எழுப்பப்பட்டது. அது குறித்த வழக்கில் அவரைத் தகுதி நீக்கம் செய்து பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் தனது பிரதமர் பதவியையும் எம்.பி. பதவியையும் ராஜிநாமா செய்தார்.
அவர் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் 3 வழக்குகளை தேசிய ஊழல் தடுப்பு அமைப்பு பதிவு செய்துள்ளது.
தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் அரசியல் உள்நோக்கத்தோடு சுமத்தப்பட்டவை என்றும் தான் எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை என்றும் நவாஸ் ஷெரீஃப் கூறி வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT