உலகம்

ஊழல் வழக்கு: தென் கொரிய முன்னாள் அதிபருக்கு 24 ஆண்டுகள் சிறைத்தண்டனை! 

DIN

சியோல்: ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான வழக்கில் தென் கொரிய முன்னாள் அதிபர் பார்க் குன்-ஹேவுக்கு 24 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தென் கொரியாவின் முன்னாள் அதிபரான பார்க் குன்-ஹே. இவரது பதவிக்காலத்தில் தனது அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தி ஊழல் செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதுதொடர்பான வழக்கு விசாரணை அந்நாட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

அந்த வழக்கில் வெள்ளியன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் தனது அதிகார துஷ்பிரயோகம் மூலம் ஊழலில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டு அவருக்கு 24 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

அத்துடன் தீர்ப்பில் நாட்டில் மிகப் பெரிய குழப்பத்தை ஏற்படுத்திய பார்க், தான் செய்த குற்றத்தை உணர்ந்து அதற்குரிய வருத்தத்தை தெரிவிப்பதற்கான சிறு அடையாளம் கூட இல்லை என்று நீதிபதி கிம் சே-யோன் தனது தீர்ப்பில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நீதிபதி அவருக்கு 17 மில்லியன் டாலர்கள் அபராதமும் விதித்துள்ளார். தீர்ப்பு அறிவிக்கப்படும் போது பார்க் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. பின்னர் தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்த அவர், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

SCROLL FOR NEXT