உலகம்

சிரியாவில் குண்டு வெடிப்பில் கட்டடம் இடிந்து 31 பேர் பலி! 

IANS

டமாஸ்கஸ்: சிரியாவில் இஸ்லாமிய போராளிக் குழுக்கள் ஆக்கிரமிப்பில் உள்ள இட்லிப் நகரத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில், கட்டடம் இடிந்து 31 பேர் பலியாகினர்.

சிரியாவில் அதிபர் அல் பஷாருக்கு  எதிராக ஆயுதம் ஏந்திய போராளிக் குழுக்கள் போராடி வருகின்றன. அப்படி போராடி வரும் இஸ்லாமிய போராளிக் குழுக்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது இட்லிப் நகரம். அங்கு செவ்வாயன்று பெரும் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

இந்த குண்டு வெடிப்பின் காரணமாக அருகிலிருந்த கட்டடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 31 பேர் பலியாகினர். இவர்களில் 22 பேர் பொதுமக்கள்; மீதமுள்ள 9 பேர் ராணுவத்தினைச் சேர்ந்தவர்கள்.

'சிரியா சிவில் டிபன்ஸ்' என்னும் தன்னார்வ அமைப்பு இடிபாடுகளிலிருந்து பலியானோரை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

இந்த தகவல்களை சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பகம் என்னும் அமைப்பு வெளியிட்டுள்ளது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாம்பு கடித்து பழங்குடியின இளைஞா் காயம்

கஞ்சா விற்றதாக பிகாா் இளைஞா்கள் 2 போ் கைது

கிருஷ்ணகிரியில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

ராமநாதபுரம்-புவனேஸ்வா் ரயிலில் கூடுதல் பெட்டி

பைக்கில் வைத்திருந்த ரூ.5 லட்சம் மாயம்

SCROLL FOR NEXT