உலகம்

மோடியை கிண்டல் செய்து செய்தி வெளியிட்ட அர்ஜென்டினா நாட்டு டிவியால் சர்ச்சை 

G20 மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடியை கிண்டல் செய்து செய்தி வெளியிட்ட அர்ஜென்டினா நாட்டு டிவியால் சர்ச்சை எழுந்துள்ளது. 

DIN

பியுனோஸ் அயர்ஸ்: G20 மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடியை கிண்டல் செய்து செய்தி வெளியிட்ட அர்ஜென்டினா நாட்டு டிவியால் சர்ச்சை எழுந்துள்ளது. 

அர்ஜென்டினா நாட்டின் தலைநகரான பியுனோஸ் அயர்ஸ் நகரில்  நடைபெற்ற  ‘ஜி-20’ உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக   பிரதமர் நரேந்திர மோடி சென்றிருந்தார். அவரது வருகை குறித்த செய்தி அங்குள்ள ஊடகங்களில் வெளியானது குறிப்பாக குரோனிகா என்ற செய்தி சேனலும் இதுகுறித்து கிண்டலாக செய்தி ஒன்றை வெளியிட்டது.

‘அபு வந்து சேர்ந்தார்’ என்ற தலைப்புடன் மோடியின் வருகை குறித்த செய்தி அத்தொலைக்காட்சியில் வெளியாகியிருந்தது. அர்ஜென்டினாவில் ஒளிபரப்பாகிற ‘தி சிம்ப்சன்ஸ்’ என்ற பிரபலமான காமெடி கேலிச்சித்திர தொடரில் இடம்பெறும் கேலிக்குரிய இந்திய கடைக்காரர் ஒருவரின்  கதாபாத்திரத்தின் பெயர்தான் அபு என்பதாகும். அத்துடன் அபு கதாபாத்திரத்தையும் செய்தியின் போது அந்த தொலைக்காட்சி ஒளிபரப்பியது. 

இப்படி ஒரு கேலிச்சித்திர கதாபாத்திரத்தின் பெயரில் மோடியின் வருகை செய்தியாக்கப்பட்டது சமூக வலைத்தகங்களில் கடும் விமர்சனத்திற்குள்ளானது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆர். நல்லகண்ணு டிஸ்சார்ஜ்

கனவுத் தயாரிப்பு... அப்ரீன் ஆல்வி!

லோதா டெவலப்பர்ஸ் விற்பனை 7% அதிகரிப்பு!

பெரிய ஸ்கோரை எதிர்பார்த்தேன்... சதத்தை தவறவிட்டது குறித்து சாய் சுதர்சன்!

‘எங்களுடன் விளையாட வேண்டாம்’..! பாகிஸ்தானுக்கு தலிபான் அமைச்சர் எச்சரிக்கை!

SCROLL FOR NEXT