உலகம்

வங்கதேச நாடாளுமன்றத் தேர்தல்: ஆளும்கட்சி-எதிர்க்கட்சி அறிக்கைகள் வெளியீடு

DIN


வங்கதேச நாடாளுமன்றத் தேர்தலையொட்டி ஆளும் அவாமி லீக் கட்சி சார்பிலும், எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாதக் கட்சி சார்பிலும் தேர்தல் அறிக்கைகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன.
வங்கதேசத்தில் டிசம்பர் 30-ஆம் தேதி நாடாளுமன்றத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆளும் அவாமி லீக் கட்சிக்கும், ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலீதா ஜியாவின் வங்கதேச தேசியவாதக் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், இருகட்சிகளும் தத்தமது தேர்தல் அறிக்கைகளை செவ்வாய்க்கிழமை வெளியிட்டன.
அவாமி லீக் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், கடந்த 2009-ஆம் ஆண்டிலிருந்து ஆளும் கட்சியாக இருக்கும் அவாமி லீக் எந்த தவறு செய்திருந்தாலும் அதனை வாக்காளர்கள் கருணை உள்ளத்தோடு அணுக வேண்டும் என்று பிரதமர் ஹசீனா கேட்டுக் கொண்டுள்ளார். 
80 பக்கங்களைக் கொண்ட அந்த தேர்தல் அறிக்கையில் வங்கதேசத்தை முன்னேற்றுவதற்கு 21 திட்டங்களை நிறைவேற்ற உறுதியேற்றுள்ளதாக ஹசீனா தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாதக் கட்சி (பிஎன்பி) சார்பில், அதன் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொது செயலர் மிர்ஸா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீர் வெளியிட்டார்.
இந்த தேர்தல் அறிக்கையில், டிஜிட்டல் பாதுகாப்பு சட்டம், அலுவலக பாதுகாப்பு சட்டம், சிறப்பு அதிகார சட்டம் உள்ளிட்ட அனைத்து கருப்பு சட்டங்களும் நீக்கப்படும் என்று பிஎன்பி உறுதியளித்துள்ளது.
இரண்டு ஊழல் வழக்குகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாதக் கட்சியின் தலைவருமான கலீதா ஜியா, தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதியை டாக்கா உயர்நீதிமன்றம் அண்மையில் ரத்து செய்தது. 
இதையடுத்து, வரும் 30-ஆம் தேதி நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் அவர் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாத்தான்குளம் பரி. ஸ்தேவான் ஆலய பிரதிஷ்டை பண்டிகை

ஆத்தூா்-கீரனூா் கோயிலில் பாலாலயம்

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவா் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

ஆத்தூா் அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT