உலகம்

வங்கதேச பொதுத்தேர்தலில் வன்முறை: 5 பேர் சாவு; 10 பேர் படுகாயம்  

DIN

டாக்கா: வங்கதேச பொதுத்தேர்தலில் நடந்த வன்முறை சம்பவத்தில் 5 பேர் பலியாகினர்.மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர். 

வங்கதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிச.30) பொதுத் தேர்தல் நடைபெறுவதையொட்டி 6 லட்சம் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.  இந்த தேர்தலில் 10.41 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். கட்சிகளின் பிரசாரம் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தன . 

இதையடுத்து, பொதுத் தேர்தலை அமைதியாக நடத்தும் விதமாக நாடு முழுவதும் ராணுவம், துணை ராணுவப் படையைச் சேர்ந்த 6 லட்சம் பேர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கும்படி பாதுகாப்பு படைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சமூக வலைதளங்கள் மூலம் வதந்திகள் பரவுவதை தடுக்க ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரை வங்கதேச தொலைத் தொடர்பு நிறுவனங்கள் 3ஜி மற்றும் 4ஜி சேவைகளை நிறுத்தி வைக்கும்படி அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருந்தபோதிலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் தொடர்பான வன்முறைச் சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்றன.

இந்நிலையில் பொதுத்தேர்தலில் நடந்த வன்முறை சம்பவத்தில் 5 பேர் பலியாகினர்.மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர்.  

ஆளும் அவாமி லீக் கட்சி மற்றும் வங்காளதேச தேசியவாத கட்சி (பி.என்.பி.) ஆதரவாளர்களிடையே திடீரென கைகலப்பு உருண்டாகி மோதளாக மாறியது. இந்த சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வடைந்துள்ளது.  10 பேர் படு காயம் அடைந்து உள்ளனர்.  

இந்த சம்பவத்தைத் தொடந்து  போலீசார் பாதுகாப்புடன் வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT