உலகம்

பாகிஸ்தானின் பிரபல சமூக ஆர்வலர் அஸ்மா ஜஹாங்கீர் மாரடைப்பால் மரணம்

DIN

பாகிஸ்தானின் பிரபல மனித உரிமை வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான அஸ்மா ஜஹாங்கீர் (66) ஞாயிற்றுக்கிழமை மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
இதுகுறித்து மூத்த வழக்கறிஞர் அதீல் ராஜா கூறியதாவது:
அஸ்மா ஜஹாங்கீருக்கு ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் லாகூரில் உள்ள ஹமீது லத்தீப் மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே அவர் உயிர் பிரிந்து விட்டது. அவரின் இறப்பு பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட பெரிய இழப்பு என்றார் அவர். லாகூரில் கடந்த 1952 ஜனவரி மாதம் பிறந்த அஸ்மா ஜஹாங்கீர், பாகிஸ்தானில் மனித உரிமைகளுக்காக குரல் கொடுப்பதில் முக்கியமானவராகத் திகழ்ந்தார். 
பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் 1978-ஆம் ஆண்டு எல்.எல்.பி. பட்டம் பெற்ற அவர், உயர் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் வழக்கறிஞராக தனது பணியைத் தொடங்கினார். சர்வாதிகாரியான ஜியாவுல் ஹக்குக்கு எதிராக கடந்த 1983-ஆம் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்று சிறைக்கும் சென்றவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

SCROLL FOR NEXT