உலகம்

மெக்ஸிகோவில் நிலநடுக்கம்: ஹெலிகாப்டர் விபத்தில் 13 பேர் பலி

DIN

மெக்ஸிகோவில் சனிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் பாதிப்புகளைப் பார்வையிடச் சென்ற அமைச்சரின் ஹெலிகாப்டர் மோதியதில் 13 பேர் உயிரிழந்தனர்.
எனினும் ஹெலிகாப்டரில் பயணம் செய்த அமைச்சர், மாகாண ஆளுநர் ஆகியோர் உயிர் தப்பினர்.
மெக்ஸிகோவின் தெற்குப் பகுதியில் உள்ள ஓக்ஸாகா மாகாணம், பியூர்டோ எஸ்காண்டிடோ சுற்றுலா தலத்துக்கு 145 கி.மீ. தொலைவில், பூமிக்கு அடியில் 24.6 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.2 அலகுகளாக இந்த நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
இந்த நிலநடுக்கம் காரணமாக, மெக்ஸிகோவின் தெற்கு மற்றும் மத்தியப் பகுதிகள் குலுங்கின.நிலநடுக்கத்தின் அதிர்வுகள் தலைநகர் மெக்ஸிகோவிலும் உணரப்பட்டதால் அங்கு நிலநடுக்க அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. வீடுகள், கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் தங்கள் வசிப்பிடங்களை விட்டு அலறியடித்து வெளியேறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கம் காரணமாக உயிர்ச் சேதம் அல்லது பொருள் சேதம் ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை. எனினும், நிலநடுக்க பாதிப்பை பார்வையிடச் சென்ற அமைச்சரின் ஹெலிகாப்டர் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியருகே அருகே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சாலையில் நின்றுகொண்டிருந்த 3 குழந்தைகள், 5 பெண்கள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.
அந்த விமானத்தில் உள்துறை அமைச்சர்அல்ஃபான்úஸா நவரெட், ஓக்ஸாகா மாகாண ஆளுநர் அலெஸாண்ட்ரோ மியூரட் ஆகியோர் வந்திருந்தனர். அவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். 
அந்த ஹெலிகாப்டர் 40 மீட்டர் உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது விமானியின் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனிடையே, ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மெக்ஸிகோ அதிபர் என்ரிக் பெனா நியேட்டோ தனது சுட்டுரை (டுவிட்டர்) பக்கத்தில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

SCROLL FOR NEXT