உலகம்

ஸ்காட்லாந்து யார்டு காவல்துறை பதவிக்கான போட்டியில் இந்திய வம்சாவளி அதிகாரி

DIN

உலகின் தலைசிறந்த காவல் துறையான பிரிட்டனின் ஸ்காட்லாந்து யார்டு போலீஸின் பயங்கரவாத எதிர்ப்புப் படையின் தலைவர் பதவிக்கான போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அதிகாரி நீல் பாசு உள்ளார்.
இப்போது அவர் ஸ்காட்லாந்து யார்டு துணை ஆணையராகவும், பிரிட்டனின் பயங்கரவாத எதிர்ப்புப் படையின் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார். 
ஸ்கார்ட்லாந்து யார்டு பயங்கரவாத எதிர்ப்புப் படையின் தலைவராக இருக்கும் மார்க் ரெüலி, விரைவில் ஓய்வு பெறுகிறார். எனவே, அவருக்கு அடுத்த நிலையில் உள்ள நீல் பாசுவுக்கு தலைமைப் பொறுப்பு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. 
நீல் பாசுவின் தந்தை இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு குடிபெயர்ந்தவர் ஆவார். பிரிட்டனில் இருந்து ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்தவர்களுக்கு எதிராக நீல் பாசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதன் மூலம் அவர் பிரிட்டனில் பிரபலமடைந்தார்.
ஸ்காட்லாந்து யார்டு போலீஸில் உயர் பதவிகளில் உள்ள ஹீலியன் பால், டேவ் தாம்ஸன் ஆகியோரும் நீல் பாசுவுடன் பயங்கரவாத எதிர்ப்புப் படையின் தலைவர் பதவிக்கான போட்டியில் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கம்: கோஷ்டி மோதலில் திரிணமூல் காங். தொண்டர் பலி, பாஜக பெண் தலைவர் காயம்

டி20 உலகக் கோப்பையில் இடம்பெற கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன் போட்டி; கிரீம் ஸ்மித் கூறுவதென்ன?

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

மிஸ்டர் மனைவி நாயகிக்கு பதிலாக வானத்தைப்போல நடிகை!

வானம் வேறு.. நீலம் வேறு.. யார் சொன்னது?

SCROLL FOR NEXT