உலகம்

கஜகஸ்தானில் பேருந்து தீப்பிடித்து பெரும் விபத்து: 52 பேர் உடல்கருகி பலி! 

கஜகஸ்தானின் வட மேற்குப் பகுதியில் வியாழன் அன்று காலை பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்த விபத்தில், அதில் பயணம் செய்த 52 பேர் உடல் கருகி பலியானார்கள்.

IANS

அஸ்தானா: கஜகஸ்தானின் வட மேற்குப் பகுதியில் வியாழன் அன்று காலை பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்த விபத்தில், அதில் பயணம் செய்த 52 பேர் உடல் கருகி பலியானார்கள்.

கஜகஸ்தானின் வட மேற்குப் பகுதியில் அமைந்துள்ள சமரா - சைம்கேன்ட் சாலை பகுதியில் உள்ளூர் நேரப்படி இன்று காலை 10.30 மணி அளவில் இந்த விபத்து நடந்துள்ளது. கஜகஸ்தானுடன் ரஷ்யாவை இணைக்கும் இந்த சாலையின் வழியாகத்தான், ரஷ்யாவில் நடைபெறும் பல்வேறு கட்டுமானப் பணிகளுக்காக கஜகஸ்தான் தொழிலாளர்களை அழைத்துச் செல்வது வழக்கம்.

சம்பவத்தின் பொழுது குறிப்பிட்ட அந்தப் பேருந்தில் இரண்டு ஓட்டுநர்கள்  உட்பட 57 பேர் பயணம் செய்ததாக கஜகஸ்தான் நாட்டு அவசர சேவைத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தீ விபத்தின் பொழுது அதில் உள்ள 5 பேர் மட்டும் தப்பித்து விட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.      

தீ விபத்துக்கான காரணம் தெரியாத நிலையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இபிஎஸ் இனி முகமூடியார் பழனிசாமி என்று அழைக்கப்படுவார்! - TTV Dhinakaran

இன்று முதல் 3 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை!

விராலிமலை: 3 அரசு துணை சுகாதார நிலையங்கள் தேசிய தரச்சான்று விருது பெற்று சாதனை

எடப்பாடியார் இன்றுமுதல் முகமூடியார் என்று அழைக்கப்படுவார்! டிடிவி தினகரன்

இட ஒதுக்கீடு போராட்டத் தியாகிகள் நினைவு நாள்: ராமதாஸ், அன்புமணி தனித்தனியே மரியாதை!

SCROLL FOR NEXT