உலகம்

அமெரிக்காவின் அலாஸ்கா கடற்கரைப்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையால் பரபரப்பு! 

IANS

வாஷிங்டன்: அமெரிக்காவின் அலாஸ்கா கடற்கரைப் பகுதியில் ஏற்பட்ட 8.2 ரிக்டர் அளவுக்கொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் தெற்கு அலாஸ்கா கடற்பகுதியில் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 8.2 ரிக்டர் அளவு கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது என அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. கொடியாக் பகுதியில் இருந்து தென்கிழக்காக 300 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கத்தின்  மையம் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உண்டான    சேதங்கள் தொடர்பான தகவல் வெளியாகவில்லை. 

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினை அடுத்து சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது. கலிபோர்னியா, பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் அலாஸ்கா ஆகிய பகுதிகளுக்கு தேசிய வானிலை சேவை மையம்  எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடற்கரை பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உயரமான, பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT