முகப்பு
உலகம்

மழை வெள்ளம்: பாகிஸ்தான் அரசை விசித்திர முறையில் விமர்சித்த அந்நாட்டு நிருபர் 

கனமழை காரணமாக சாலையில் தேங்கிய வெள்ளநீர் தொடர்பாக பாகிஸ்தான் அரசு மீது அந்நாட்டு நிருபர் விசித்திரமான முறையில் தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

Updated On : 4 ஜூலை, 2018 at 6:06 PM
பகிர்:

கனமழை காரணமாக சாலையில் தேங்கிய வெள்ளநீர் தொடர்பாக பாகிஸ்தான் அரசு மீது அந்நாட்டு நிருபர் விசித்திரமான முறையில் தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள் முழுவதும் வெள்ளநீர் தேங்கியுள்ளது. இதில் பொதுமக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர். மேலும் மழையால் ஏற்பட்ட வெள்ளநீர் காரணமாக சாலைகள் முழுவதும் குளங்கள் போன்று காட்சியளித்து வருகிறது.

இந்நிலையில், அந்நாட்டைச் சேர்ந்த தொலைக்காட்சி நிருபர் ஒருவர், மழை நீரை அகற்றுவதில் அந்நாட்டு அரசின் மெத்தனப் போக்கை கண்டிக்கும் விதமாக விசித்திர முறையில் தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார். காலப்போக்கில் ஒவ்வொரு தொலைக்காட்சியும், நிருபரும் மக்களின் பார்வையை தங்கள் பக்கம் இழுக்க வித்தியாசமாக முயற்சித்து வரும் வேளையில், இவரின் இந்தச் செயல் இணையதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

Advertisement

லாஹூர் நகரின் சாலைகளில் ஏற்பட்ட வெள்ளநீரில், நீச்சல் குளங்களில் சிறுவர்களுக்கு விளையாட கொடுக்கும் மிதவைப் பொம்மைகளைக் கொண்டு அப்பகுதியை தனது சேனலுக்கு பதிவு செய்து கொண்டிருந்தார். அப்போது, "நான் ஒன்றும் நீச்சல் குளத்தில் இல்லை, இது லாஹூர் நகரின் பிரதான சாலையாகும். இதுபோன்று தான் அனைத்து சாலைகளும் மழையால் மூழ்கியுள்ளன. 

தற்போதைக்கு இதை அகற்ற அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை. இந்த வெள்ளநீரும் இங்கிருந்து செல்ல வழியில்லை. எனவே அனைவரும் இதில் மகிழ்ச்சியுடன் விளையாடலாம் வாருங்கள்" என்று அழைப்பு விடுத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.