உலகம்

வங்கிக் குளறுபடியால் சில நிமிடங்கள் கோடீஸ்வரியாக இருந்த பெண்: உடனே வேலையை விட நினைத்தாராம்!

DIN


போஸ்டன்: வங்கிக் குளறுபடியால் போஸ்டனைச் சேர்ந்த ஒரு பெண், ஒரு சில நிமிடங்கள் கோடீஸ்வரியாக இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எல்லென் ஃபிளெம்மிங்குக்கு ஒரு வாய்ஸ் மெசேஜ் வந்தது. அதில் பேசிய குரல், அவரது வங்கிக் கணக்கில் சுமார் 1.1 மில்லியன் டாலர் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகக் கூறியது. 

உடனடியாக அவர் தனது செல்போனில் இருக்கும் வங்கிக் கணக்குக்கான செயலியை திறந்து பார்த்தார். அதில் ஒரு சில மாதங்களுக்கு முன்பு தான் வங்கியில் வைத்திருந்த 50 டாலர்களுக்கு பதில் 1.1 மில்லியன் டாலர் இருப்பதாகக் கூறியது.

உடனடியாக தனது வேலையை விட்டுவிட்டு, தனக்கிருக்கும் கல்விக் கடனை அடைத்து விட வேண்டும் என்று நினைத்த ஃபிளெம்மிங், அப்படி செய்யாமல், வங்கியை தொடர்பு கொண்டு நடந்த விஷயத்தைக் கூறினார்.

அப்போதுதான், ஃப்ளோரிடாவில் உள்ள ஃபிளெம்மிங் என்ற பெண்ணுக்கு பதிலாக இவரது வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டது தெரிய வந்து, உடனடியாகக் கோளாறு சரி செய்யப்பட்டது.

இது பற்றி ஃபிளெம்மிங் பேசுகையில், தான் ஒரு 'ஒன் டைம் கோடீஸ்வரி' என்று கூறி சிரிக்கிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

SCROLL FOR NEXT