உலகம்

அமெரிக்கா செல்ல தயாராகும் ரஷிய அதிபர் புதின்

ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ANI

ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உடனான பேச்சுவார்த்தைக்கு ரஷியா தயாராக இருப்பதாக அந்நாட்டு அதிபர் விளாதிமீர் புதின், பிரிக்ஸ் மாநாட்டில் தெரிவித்தார். மேலும் இதுகுறித்து கூறுகையில், அமெரிக்க அதிபருடனான சந்திப்புக்கு ரஷியா எப்போதுமே தயாராக உள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடம் மாஸ்கோ வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அழைப்பு அவரிடம் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. நானே அதுகுறித்து அவரிடம் தெரிவித்துள்ளேன் என்றார்.

இருப்பினும் இதை வெள்ளை மாளிகை மறுத்துள்ளது. டிரம்புக்கு புதின் அழைப்பு தொடர்பாக வெள்ளை மாளிகை ஊடகச் செயலர் சாரா சாண்டர்ஸ் கூறுகையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷியா செல்ல தயாராக இருக்கிறார்.

ஆனால், அவருக்கு அதுதொடர்பான ரஷிய அதிபர் புதினிடம் இருந்து எந்த அழைப்பும் இதுவரை வரவில்லை என்றார். மேலும், ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை அமெரிக்காவுக்கு அழைக்க டெனால்டு டிரம்ப் விரும்புவதாகவும், அழைப்பு வந்தால் நிச்சயம் டிரம்ப், ரஷியா செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் சாரா தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீரன் சின்னமலை நினைவு நாள்: மலர் தூவி மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிசாமி!

பென்னாகரம் காவல் நிலையம் முன்பு பாமகவினர் சாலை மறியல்

கூட்டணியிலிருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தமளிக்கிறது: டிடிவி தினகரன்

சண்டீகரில் பணம் மோசடி வழக்கு: தேடப்பட்ட கோவை குற்றவாளி கரூரில் சிபிஐ போலீஸாரால் கைது

நான் கூலியில் நடிக்க ஒரே காரணம் இதுதான்: ஆமிர் கான்

SCROLL FOR NEXT