முகப்பு
உலகம்

கௌதமாலா எரிமலை வெடிப்பு: 25 பேர் உயிரிழப்பு?

கௌதமாலா நகரில் ஃபியூகோ எனும் எரிமலை வெடித்து சிதறியதில் 25 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:13 PM
பகிர்:

ஃபியூகோ எனும் எரிமலை கௌதமாலா நாட்டின் தலைநகர் கௌதமாலா நகரில் இருந்து 40 கிலோமீட்டர் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இந்த எரிமலை கடந்த சில நாட்களாகவே கரும்புகையையும், சாம்பலையும் வெளியிட்டு வந்தது. இதனால், அங்குள்ள விமான சேவை நிறுத்தப்பட்டது. 

இந்நிலையில், அந்த எரிமலை குழம்பு அருகில் உள்ள கிராமத்துக்கு வந்தது. இதில், இதுவரை 25 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்று அந்நாட்டு அதிகாரிகள் அச்சப்படுகின்றனர். முன்னதாக, 6 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 

இதனால், அந்நாட்டு அரசு தற்போது அங்கு அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது. மேலும், பாதிப்படைந்த இடத்துக்கு செல்ல வேண்டாம் என்றும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.