உலகம்

பயனாளர்களின் தகவல்களை செல்போன் நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்ட பேஸ்புக்: வெளிவரும் அடுத்த பூதம் 

பயனாளர்களின் தகவல்களை செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுடன் பேஸ்புக் நிறுவனம் பகிர்ந்து கொண்ட அதிர்ச்சித் தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது. 

IANS

நியூயார்க்: பயனாளர்களின் தகவல்களை செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுடன் பேஸ்புக் நிறுவனம் பகிர்ந்து கொண்ட அதிர்ச்சித் தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது. 

இதுதொடர்பாக பிரபல நியூயார்க் டைம்ஸ் இதழில் கட்டுரை ஒன்று வெளிவந்துள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது:

உலகின் மிகப் பிரபலமான சமூக வலைத்தளங்களில் ஒன்றாக பேஸ்புக் திகழ்ந்து வருகிறது. ஆனால் அது அவ்வளவாக பிரபலமாவதற்கு முன்பாகவே, உலகின் ஆப்பிள்  மற்றும் சாம்சங் உள்ளிட்ட 60 முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுடன் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. அதன்படி பேஸ்புக் செயலியை குறிப்பிட்ட செல்போன் நிறுவன தயாரிப்பு போன்களில் பயன்படுத்தும் பயனாளர்கள் மற்றும் அவர்களது நண்பர்கள் குறித்த அந்தரங்கத் தகவல்களை, பேஸ்புக் நிறுவனமானது குறிப்பிட்ட தயாரிப்பு நிறுவனங்களுடன் பகிந்து கொண்டுள்ளது.

இதன்மூலம் பேஸ்புக் நிறுவனமானது தனது வீச்சினை அதிகப்படுத்திக் கொள்ளும் அதேசமயம், குறிப்பிட்ட தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு, பேஸ்புக்கின் சிறப்பு வசதிகளான மெஸெஞ்சர் மற்றும் அட்ரஸ் புக் உள்ளிட்டவற்றை வழங்கி வந்தது.

ஆனால் பேஸ்புக்கின் இந்த நடவடிக்கைகள் அமெரிக்காவின் 'மத்திய வணிக ஆணையம்' என்னும் சுதந்திர  அமைப்புடன், பேஸ்புக் நிறுவனம் 2011-ஆம் ஆண்டு செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்திற்கு எதிரானது என்னும் பேச்சு கிளம்பியுள்ளது.       

சில மாதங்களுக்கு முன்னதாக 'கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்கா' என்னும் தேர்தல் ஆய்வு நிறுவனத்துடன் பேஸ்புக் நிறுவனம் தகவல்களை பகிந்து கொண்டது கடும் சர்ச்சைகளை உண்டாக்கியது நினைவிருக்கலாம். அதில் முதலில் பயனாளர்கள் மட்டுமல்லாது அவர்களின் நண்பர்களின் தகவல்களும் பகிரப்பட்டது. பின்னர் பேஸ்புக் நிறுவனமானது, பயனாளர்களின் நண்பர்களின் தகவல்களை பகிர்வதை நிறுத்தி விட்டது. ஆனால் செல்போன் நிறுவனங்களுடனான ஒப்பந்தத்தில் அப்படி எதுவும் தடை இல்லை என்று கூறப்பட்டுள்ளது. 

ஆனால் இத்தகைய ஒப்பந்தங்கள் மிகவும் வரையறுக்கப்பட்ட தன்மையுடையவை என்றும், இதன் மூலம் மிகவும் குறைவான அளவே தவறுகள் நிகழ்ந்தது தங்களுக்குத் தெரியும் என்றும் பேஸ்புக் நிறுவன துணைத் தலைவர்களில் ஒருவரான ஐம் ஆர்ச்சிபோங் தெரிவித்துளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

2-ஆவது இன்னிங்ஸில் 400 ரன்களை நூலிழையில் தவறவிட்ட இந்தியா: அபார முன்னிலை!

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

ஓணக் களிப்பில்... மோக்‌ஷா!

பனியும் சுடுகிறது... ஶ்ரீத்து கிருஷ்ணன்

SCROLL FOR NEXT