சவூதி அரேபியா: யேமன் கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை வீச்சு
சவூதி அரேபியாவை நோக்கி யேமன் கிளர்ச்சியாளர்கள் மேலும் ஒரு ஏவுகணையை வீசியதாக சவூதி தலைமையிலான கூட்டுப்படை தெரிவித்துள்ளது.
சவூதி அரேபியாவை நோக்கி யேமன் கிளர்ச்சியாளர்கள் மேலும் ஒரு ஏவுகணையை வீசியதாக சவூதி தலைமையிலான கூட்டுப்படை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கூட்டுப் படை செய்தித் தொடர்பாளர் துருக்கி அல்-மாலிக்கி கூறுகையில், சவூதியின் மேற்கு கடற்கரை நகரமான யான்புவை நோக்கி யேமன் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியிலிருந்து ஏவுகணை வீசப்பட்டது. அந்த ஏவுகணையை சவூதியின் விமான எதிர்ப்பு ஏவுகணை வெற்றிகரமாக இடைமறித்து அழித்தது. இந்தத் தாக்குதலில் யாரும் காயமடையவில்லை என்றார் அவர்.