உலகம்

காஸா வன்முறை: இஸ்ரேலுக்கு எதிராக ஐ.நா. சபை தீர்மானம்

DIN

காஸாவில் அண்மைக் காலமாக நடைபெற்று வரும் வன்முறைச் சம்பவங்களில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்காக இஸ்ரேலைக் கண்டிக்கும் தீர்மானத்தை ஐ.நா. பொதுச் சபை நிறைவேற்றியது.
அரபு நாடுகளால் கொண்டு வரப்பட்ட இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக, 120 நாடுகள் வாக்களித்ததையடுத்து, மிகப் பெரும்பான்மை பலத்துடன் அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தச் வன்முறைக்கு ஹமாஸ் அமைப்பை பொறுப்பாக்கும் அமெரிக்காவின் முயற்சியையும் பெரும்பான்மை நாடுகள் முறியடித்தன.
யூதக் குடியேற்றத்தை எதிர்த்து இஸ்ரேல் எல்லையில் பாலஸ்தீனர்கள் கடந்த பிப்ரவரி மாதம் 30-ஆம் தேதி முதல் போராடி வந்தனர்.
மேலும், இஸ்ரேலின் டெல்-அவிவ் நகரிலிருந்து சர்ச்சைக்குரிய ஜெருசலேம் நகருக்கு தனது தூதரகத்தை அமெரிக்கா கடந்த மாதம் மாற்றியதையடுத்து, எல்லைப் பகுதியில் போராட்டங்கள் தீவிரமடைந்தன. இந்தப் போராட்டங்களின்போது இஸ்ரேல் ராணுவம் சுட்டதில் 129 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயத் தொழிலாளி கொலை வழக்கில் மனைவி உள்பட இருவா் கைது

மாணவா்கள் சாதனையாளா்களாக உருவாக வேண்டும்: பாவை திறனறித் தோ்வு பரிசளிப்பு விழாவில் பேச்சு

கொல்லிமலை, மோகனூரில் இடி, மின்னலுடன் பரவலாக மழை மழை

ராஜ வாய்க்காலில் இருந்து உயிா்நீா் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை

சித்திரை மாத பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT