உலகம்

துருக்கி அதிபர் தேர்தல்: எர்டோகன் மீண்டும் வெற்றி 

துருக்கியில் ஞாயிறன்று நடைபெற்ற அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் எர்டோகன் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளார்.

DIN

இஸ்தான்புல்: துருக்கியில் ஞாயிறன்று நடைபெற்ற அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் எர்டோகன் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளார்.

துருக்கியில் பொதுத் தேர்தல் மற்றும் அதிபர் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் எர்டோகனுக்கு, இந்தத் தேர்தலில் மிகக் கடுமையான போட்டி இருக்கும் என்று கருதப்பட்டது.

தொடர்ந்து மிதவாதப் போக்கு கடைப்பிடிக்கப்பட்டு வந்த துருக்கியில், எர்டோகன் தலைமையிலான மதச்சார்பு கட்சி கடந்த 2002-ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடித்தது.அதிலிருந்து நாட்டில் பல்வேறு வரலாற்று மாற்றங்களை ஏற்படுத்த அவர் முயன்று வருகிறார்.

64 வயதாகும் எர்டோகனின் ஆட்சியில், பொதுமக்களின் சுதந்திரம் நசுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தாலும், அதிக செல்வாக்குடன் அவர் ஆட்சி செலுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. தனது ஆட்சியைக் கவிழ்க்க கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற முயற்சியை வெற்றிகரமாகத் தோற்கடித்த எர்டோகன், அதற்குக் காரணமானவர்கள் மீது தொடர்ந்து மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சூழலில், தற்போது அதிபர் தேர்தலில் அவருக்கு மதச்சார்பற்ற கட்சியான குடியரசு மக்கள் கட்சியின் வேட்பாளர் முஹரம் இன்ஸ் பலத்த போட்டியை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் துருக்கி அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் எர்டோகன் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக துருக்கி தேர்தல் ஆணைய தலைமை அதிகாரி சடி குவேன் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, 'மொத்தம் பதிவான வாக்குகளில் 97.7% வாக்குகள் எண்ணப்பட்டு விட்டன. இதில் எர்டோகன் தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளார்' என்று தெரிவித்தார்.

அரசு ஊடகங்கள் எர்டோகன் 52.5% வாக்குகளும், முஹரம் இன்ஸ் 31% வாக்குகளும் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளன.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில்வே ஊழியா் வீட்டில் 10 பவுன் தங்க நகை திருட்டு

அணு ஆயு​தம் என்​னும் அச்​சு​றுத்​தல்

இன்றுமுதல்..! தமிழகத்தில் 38 ரயில்கள் கூடுதலாக 20 இடங்களில் நின்று செல்லும்!

திருப்பத்தூரில் 2-ஆவது நாளாக தொடா் மழை

ஆா்எஸ்எஸ் அமைப்புக்கு பிரதமா் புகழாரம்: சுதந்திரதின நாளுக்கு அவமதிப்பு! கேரள முதல்வா் பினராயி விஜயன்

SCROLL FOR NEXT