உலகம்

நைஜீரியாவில் நிலத்திற்காக இரு இனக்குழுக்களிடையே வன்முறை: 86 பேர் பலி

DIN

ஜோஸ்: நைஜீரியாவில் மேய்ச்சல் நிலம் தொடர்பாக உருவான பயங்கர வன்முறையால் 86 பேர் கொல்லப்பட்ட கொடூரம் நிகழ்ந்துள்ளது.

நைஜீரியாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது பிளாட்டோ மாகாணம். இங்குள்ள பரிகின் லாடி பகுதியில் இரு இனக் குழுக்களுக்கு இடையில் கடந்த வார இறுதியில் இருந்து மேய்ச்சல் நிலம் தொடர்பாக மோதல்  ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இரு பிரிவினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.

அப்போது ஏற்பட்ட கலவரத்தில் இரு தரப்பிலும் சேர்த்து 86 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். 50-க்கு மேற்பட்ட வீடுகள் மற்றும் வாகனங்கள் சிலவும் சூறையாடப்பட்டன. கலவரம் ஏற்பட்ட பகுதிகளில் தற்பொழுது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நைஜீரியாவில் மேய்ச்சல் நிலம் தொடர்பாக பாரம்பரிய விவசாய இனக்குழுக்களுக்கும், மேய்ச்சல் தொழில் செய்யும் மற்றொரு இனக்குழுக்களுக்கும் இடையே  மோதல்கள் நடப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் 60 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இனிமேல் சிங்கிள்!

சோதனைமேல் சோதனை.. ஹார்திக் பாண்டியாவுக்கு மீண்டும் அபராதம்!

திரையரங்கிற்குள் பட்டாசு வெடித்த அஜித் ரசிகர்கள்!

‘பார்பி’ ஆண்டிரியா!

SCROLL FOR NEXT