உலகம்

கென்யாவில் காய்கறி சந்தையில் தீ விபத்து: 15 பேர் பலி 

DIN

நைரோபி: கென்யத் தலைநகர் நைரோபியில் உள்ள காய்கறி சந்தை ஒன்றில் வியாழன் அன்று ஏற்பட்ட தீடீர் தீ விபத்தில்  15 பேர் உடல் கருகி பரிதாபமாகப் பலியாகினர்.

கென்ய நாட்டின் தலைநகர் நைரோபியில் பெரிய காய்கறி சந்தை ஒன்று உள்ளது. அந்த சநதையில் வியாழன்  அன்று அதிகாலை திடீர் என தீ பற்றியது. சந்தை உட்பகுதியில் பற்றிய தீ, படிப்படியாக அக்கம்பக்கம் இருந்த கட்டடங்களுக்கும் பரவியது. இந்த தீயில் சிக்கிய 15 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும் 70-க்கும் மேற்பட்டோர் பலத்த தீக்காயம் அடைந்துள்ளனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்தவுடன் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர். தீ விபத்தில் சிக்கிய கட்டடங்கள் சிதைவுற்று பலவீனமாக இருப்பதால், தீயில் பலியானோரின் உடல்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள தீயனைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

பூவினுள் மணம் போல் அகத்திணை மரபு!

SCROLL FOR NEXT