முகப்பு
உலகம்

டிவிட்டரில் உண்மையை விட பொய்யான செய்திகள் வேகமாகப் பரவுகின்றன: ஆய்வில் தகவல்

டிவிட்டரில் பல உண்மையான செய்திகளை விடவும், பொய்யான செய்திகள் அதிக நபர்களை வேகமாக சென்றடைவதாக அமெரிக்காவின் எம்ஐடி மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 9 மார்ச், 2018 at 5:51 PM
பகிர்:


நியூ யார்க்: டிவிட்டரில் பல உண்மையான செய்திகளை விடவும், பொய்யான செய்திகள் அதிக நபர்களை வேகமாக சென்றடைவதாக அமெரிக்காவின் எம்ஐடி மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு காரணம் என்ன என்றால், டிவிட்டரை இயக்குபவர்கள் மனிதர்கள், ரோபோக்கள் அல்ல, அவர்கள் இதுபோன்ற செய்திகளைப் பரப்பவே அதிகம் விரும்புகிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல தகவல்களை ஒரே சமயத்தில் உலகம் முழுவதும் பரவச் செய்யும் ஆற்றல் கொண்ட சமூக வலைத்தளங்களில், தவறான செய்திகளும் வேகமாக அதே சமயம், அதிக நபர்களுக்கு பரவுவது ஒரு எதிர்மறை விஷயம்தான்.

Advertisement

மேலும் இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் சொல்வது என்னவென்றால், பொய்யான தகவல்கள் உண்மையான செய்திகளை விட 70 சதவீதம் அதிகமான நபர்களால் ரீடிவீட் செய்யப்படுவதாகவும், ஒரு தவறான செய்தி ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஆயிரத்து ஐநூறு பேரை சென்றடையும் என்றால், அதே உண்மையான செய்தி அதே ஆயிரத்து ஐநூறு பேரை சென்றடைய 6 மடங்கு அதிகமான நேரம் பிடிக்கிறது.

இதற்கு ஒரு சூட்சுமத்தையும் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதாவது, யாருக்குமே தெரியாத ஒரு விஷயத்தை தான் முதலில் ஷேர் செய்வதை பலரும் பெருமையாகக் கருதுகிறார்கள். அதே சமயம், அந்த 'யாருக்கும் தெரியாத விஷயம்' தவறான விஷயமாக இருந்துவிடுகிறது. இது பலருக்கும் தெரிவதில்லை.

அதே சமயம், உண்மையான செய்திகளை விட, தவறான செய்திகளுக்குத் தான் மக்கள் அதிகமாக ஆச்சரியம் அல்லது அதிருப்தியை தெரிவிக்கிறார்கள் என்றும் சொல்கிறது ஆய்வு.

எனவே, சமூக வலைத்தளத்தில் நமக்கு வரும் எந்த செய்தியையும் அதன் உண்மைத் தன்மை அறியாமல் அதை கண்மூடித்தனமாக ரீ-டிவீட்டோ அல்லது ஷேரோ செய்யாமல் தவிர்த்தால், வேகமாகப் பரவும் பொய்யான தகவல்களின் அந்த தொடர் சங்கிலி ஓரிடத்தில் அறுபட வாய்ப்பு ஏற்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.