முகப்பு
உலகம்

நேபாள ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக பித்யா தேவி பண்டாரி தேர்வு! 

நேபாளத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற பித்யா தேவி பண்டாரி இரண்டாவது முறையாக ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Updated On : 13 மார்ச், 2018 at 6:55 PM
பகிர்:

காத்மண்டு: நேபாளத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற பித்யா தேவி பண்டாரி இரண்டாவது முறையாக ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் ஜனாதிபதியாக இருந்த பித்யா தேவி பண்டாரியின் பதவிக்காலம் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து அப்பதவிக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதில் தற்போதைய ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் இரண்டாவது முறையாக போட்டியிட்டார். அதே சமயம் நேபாள காங்கிரஸ் கட்சியின் சார்பில் குமாரி லக்ஷ்மி ராய் அவரை எதிர்த்துப் போட்டியிட்டார்.

275 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 550 மாகாண சபை உறுப்பினர்கள் ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்தனர். இந்த தேர்தலின் முடிவு செவ்வாயன்று அறிவிக்கப்பட்டது. இதில் பித்யா தேவி பண்டாரி வெற்றி பெற்றதாக அந்நாட்டு பாராளுமன்ற செயலகம் அறிவித்துள்ளது.

Advertisement

அவர் விரைவில் பதவியேற்றுக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.