உலகம்

எத்தியோப்பியாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 38 பேர் பரிதாப பலி! 

ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் பயணிகள் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 38 பேர் பரிதாபமாக பலியாகினர்.  

DIN

அடிஸ் அபாபா: ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் பயணிகள் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 38 பேர் பரிதாபமாக பலியாகினர்.  

ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் அம்ஹாரா மாநிலம் லேகம்போ மாவட்டத்தில் செவ்வாயன்று டெஸ்சி மற்றும் மெக்கானே நகரங்களுக்கு மத்தியில் பயணியர் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது

பெரும்பாலும் மாணவர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அந்த பேருந்து திடீரென்று நிலை தடுமாறி அருகிலிருந்த பெரும் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 28 ஆண்கள், 10 பெண்கள் என மொத்தம் 38 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக அரசு செய்தி நிறுவனம் சார்பில் தகவல் வெளியிட்டுள்ளது. இறந்தவர்களில் பெரும்பாலானோர் உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிவேகத்தில் வந்த பேருந்தானது சாலையை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்ததால் பேருந்தின் ஒரு பகுதி முற்றிலும் சிதைந்து விட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

காயங்களுடன் மீட்கப்பட்ட 10 பேர்  மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை  உயர வாய்ப்புள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளியில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் என்ன வித்தியாசம்? ரசிகை ஆவேசம்

Untitled Nov 03, 2025 10:37 pm

இறுதி வரை முன்னேறினாலும்... தென்னாப்பிரிக்காவைத் துரத்தும் சோகம்!

கொண்டாட்ட நாள்... சம்யுதா!

SCROLL FOR NEXT