உலகம்

நான்கு குழந்தைகளை கோடரியால் வெட்டிக் கொன்ற கொடூரத் தந்தை!  

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் தன்னுடைய நான்கு குழந்தைகளை பெற்ற தந்தை ஒருவரே கொடூரமாக வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

DIN

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் தன்னுடைய நான்கு குழந்தைகளை பெற்ற தந்தை ஒருவரே கொடூரமாக வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சாரா-இ-ஆலம்கிர் பகுதியின் அருகேயுள்ள காம்பி மேரா கிராமத்தை சேர்ந்தவர் முஹம்மது அய்யூப்(57). இவர் தனது மனைவி மற்றும் 4 குழந்தைகளுடன் ஒரு சிறிய வீட்டில் வசித்து வருகிறார்.

இவர் ஞாயிறன்று தனது மனைவி வெளியே சென்ற பின்னர் வீட்டில் தனியாக இருந்த நான்கு குழந்தைகளையும் கோடரியால் சரமாரியாகத் தாக்கினார். இந்த கொடூரத் தாக்குதலில் அலி ஷான்(14), நாடியா(10), இஷா(9) மற்றும் ஐமென்(8) ஆகிய 4 குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே துடித்துடித்து உயிரிழந்தனர்.

குழந்தைகளின் அலறல் ஓசையை கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்து வீட்டினர் முஹம்மது அயூபை  பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இந்த கொடூர கொலைக்கு காரணம் தெரியவில்லை. விசாரணை நடைபெற்று வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் ஏடிபி சேலஞ்சா் 50 டென்னிஸ் போட்டி: பிப். 9-இல் தொடக்கம்

பிகாா் தோ்தலில் ரூ.40,000 கோடி செலவிட்டது பாஜக கூட்டணி: பேரவையில் தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

ரஷியா - உக்ரைன் அமைதிப் பேச்சுவாா்த்தை முன்னேற்றம்: போா்க் கைதிகள் பரிமாற்றத்துக்கு ஒப்புதல்

மும்பை - புணே அதிவிரைவுச் சாலையில் 30 மணி நேரம் போக்குவரத்து நெரிசல்: ஹெலிகாப்டரை வரவழைத்து ‘பறந்த’ தொழிலதிபா்

பிகாா் பேரவைக்கு மறு தோ்தல்: ஜன் சுராஜ் கட்சி வழக்கு

SCROLL FOR NEXT