உலகம்

குடிநீர் குழாயை உடைத்ததற்கு தண்டனை: சிறுமியின் வாயில் திணிக்கப்பட்ட மாட்டுச் சாணம்! 

நேபாளத்தின் பங்கே மாவட்டத்தில் குடிநீர் குழாயை உடைத்தாள் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஆறு வயது சிறுமியின் வாயில் மாட்டுச் சாணம் திணிக்கப்பட்ட கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

IANS

காத்மாண்டு: நேபாளத்தின் பங்கே aமாவட்டத்தில் குடிநீர் குழாயை உடைத்தாள் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஆறு வயது சிறுமியின் வாயில் மாட்டுச் சாணம் திணிக்கப்பட்ட கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நேபாளத்தின் பங்கே மாவட்டத்தில் அமைந்துள்ளது கொல்புர். இங்கு கிதா பரியர் (50) என்ற பெண்  வசித்து வருகிறார். திங்கள் அன்று மாலை அவரது வீட்டின் முன்பகுதியில் பக்கத்துக்கு வீட்டினைச் சேர்ந்த ஆறு வயது சிறுமி ஒருத்தி விளையாடிக் கொண்டிருந்தாள்.

அப்பொழுது எதிர்பாராதவிதமாக அந்தச் சிறுமி வாசலிலிருந்த  குடிநீர்க் குழாயினை உடைத்து விட்டார் என்று கூறப்படுகிறது. இதனைக் கண்டு கோபமுற்ற கிதா பரியர், அந்த சிறுமியின் வாயில் மாட்டுச் சாணத்தினை திணித்துள்ளார்.

விபரம் கேள்விப்பட்ட அக்கம்பக்கத்தினர் வந்து சிறுமியினை மீட்டனர். பரியர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேர்தல் ஆணையத்தின் இதே செயல்பாடு தொடர்ந்தால் ஜனநாயகத்துக்கு பேராபத்து! -சுதர்சன் ரெட்டி

இந்தியாவுடனான வணிகம் ஒருதலைபட்சமான பேரழிவு: டிரம்ப்

நான் மெஸ்ஸி கிடையாது..! தங்கப்பந்து விருது வென்ற ரோட்ரி பேட்டி!

வாக்குத் திருட்டு: பிரதமர் மோடி வெளியே முகம் காட்ட தயங்கும் நிலைமை விரைவில் ஏற்படும்! -ராகுல் காந்தி

2,900 யூனிட் இ-விட்டாரா கார்களை ஏற்றுமதி செய்த மாருதி சுசுகி!

SCROLL FOR NEXT